Wednesday, January 20, 2016

பெரும்புயல்

உன் புன்னகை சாரலால்....

 என்னுள் பெரும்புயல் !

Tuesday, January 19, 2016

பாதகியின் பார்வைகள் .....!

தூங்க விடாமல் கொன்றெடுத்த பாதகியின் பார்வைகள்

தூக்கத்திலும் கொன்றெடுத்தது

தூக்கத்தையும் கொன்றெடுத்தது


Monday, November 2, 2015

இன்றும் என்றும் உன் நினைவில்.....

இரத்தம் சிந்தவில்லை
உணவை வெறுக்கவில்லை
மணிகணக்கில் கண்ணாடியை முறைத்ததில்லை
கலைந்த தலைமுடியை கூட கொத்தி விட எண்ணியதில்லை
தூக்கம் தொலைக்கவில்லை
புத்தி பேதலிக்கவில்லை
என்னைப்பற்றி கவலை கொண்டதில்லை
இன்றோ ?


தினமும் கண்ணாடியில் கண் விழிக்கிறேன்
உன்னை காணும் ஓரிரு நிமிடிங்களுக்காக அழகனாகின்றேன்
தூக்கம் கொல்லாமல் கனவுகள் மட்டும் காண்கிறேன்
உன்னை எனக்கானவள் ஆக்கிவிட்டேன்
நான் நீயாக மாறி தினமும் என்னை காதல் செய்கிறேன்
அதை உன்னிடம் சொல்லியும் விட்டேன்
நான் நீயாக ,நீ நானாகிவிட்டாய் !

ஒரு வார்த்தையில் என்னை உன்னிலிருந்து பிரித்துவிட்டாய்
உன்னை வெறுக்கவில்லை
என்னை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்

உனக்கான நிமிடங்களில் சிறகடித்த சிறகுகளுக்கு கூட
கண்கள் முளைத்துவிட்டன
இப்போது உன்னை காணும்போதெல்லாம் அவை வெட்கி  ஒளிந்து கொள்கின்றன
மின்னல்கள் வீசி சென்ற உன் ஓரபார்வைகள்  இன்றோ இடியை இறங்குதடி
இத்தனைக்கும்  தவறேதும் செய்துவிட வில்லை


உன்னை விரும்பியதை தவிர .....


 இன்றும் என்றும் உன் நினைவில்!

Thursday, May 7, 2015

பாவத்தின் சம்பளம் .....முத்தம் !


என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன்
என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன்
என் உடன்பிறப்புகளின் சிறுசிறு  ஆசைகளை  கொன்று வந்துள்ளேன்

தினமும்  காலையில் நான்  எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும்

என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து,
உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள்

பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை பிடிக்கவில்லை  என உதறி தள்ளுவேன்

கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள்

மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன்
வலிகளை பொருத்து புன்னகை புரிவாள்

நான்  வண்ண வண்ண சட்டைகளை அணிய
என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில்
காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியும் தான் அணிந்திருந்தார்

வாயை கட்டி வயிற்றை  கட்டி எனக்காக தியாகம் செய்த
 அவர்கள் வாழ்கையை கூட மதிக்காமல் ஊதாரியாய் செலவிழுத்தேன்

தான் படிக்கவில்லை என்பதால் என் படிப்பிற்காக எதையும் செய்தார்கள்
நானோ படிக்க எதையும் செய்யவில்லை....?

மழைக்கு கூட சமையலறை பக்கம் ஒதுங்கதாவன்
சாப்பிட தட்டை கூட அலம்பதாவன்,
துணிகளை துவைக்க தெரியாதவன் ...
ஏன் என் ஆடைகளின் இருப்பிடம் கூட அறியாதவன்

இவ்வளுவும் என் பாவங்கள் என்பதை கூட அறியாதவன்

என் பாவத்தின் சம்பளம் என்னவோ.?

நான் என் சொந்த காலில் நிற்க என்னை தாங்கி பிடித்தவர்கள்
எனக்கென ஒரு வாழ்கையை வாழ்ந்தவர்கள்
எனக்கென ஒரு துணைவியை அமைத்து ,
இப்பொழுது ஒரு புதிய மேடையை அமைத்தனர்

அன்னை என்ற ஒருத்தியினை அடுத்து ,
தாரம் என்ற இரண்டாமவள் என் பாவங்களை சுமக்க போகிறாள்

மீண்டும் என் அரக்க ராஜாங்கம் ஆரம்பமாகிறது


பிறந்தது முதல் மற்றவரை நம்பியே நான் வாழ்ந்துவந்ததை உணர்கிறேன்

எனக்காக தூக்கம் துளைத்து ,
எனக்காக சமைத்து ,
எனக்காக எனக்காகவே இன்னொரு சகாப்தம் ஆரம்பமாகிறது ..
ஒரு ராஜாவை போல இத்தனை நாள் வாழ்ந்து வந்தேன்

என் தேவதை தோன்றினால்,என் மகள் பிறந்தாள் ..!

அவளை உற்று உற்று நோக்கினேன் ,கண்மணிகளை போல் காத்தேன்
அவள் கன்னங்களை கிள்ளி விளையாடுனேன்
குழல்களை  உச்சி முகர்ந்தேன் ,
பாதங்களை பற்றி வருடினேன்
பிஞ்சு விரல்களை பிடித்து நடத்தினேன்

இப்போதெல்லாம்

சமையலறை பக்கம் செல்கிறேன் ,
சாதம் பிசைகிறேன்  ,ஊட்டுகிறேன்  ,
அவள் ஆடை அறைகளை கூட அலங்கரிக்கிறேன்
அங்குலம் அங்குலமாக அவளை ரசிக்கிறேன்
அக்கறை காட்டுகிறேன் !

இவ்வளவு நாட்கள் என் தாயையும் தாரத்தையும் நான் ஏமாற்றியதை இப்போது உணர்கிறேன்
அவர்களை கண்ணோடு கண்ணாக காண வெட்கி குனிகிறேன்

அவர்களிடம் மன்னிப்பு கேட்க மனம் துடித்தாலும் ,
என் ​​​​​​​​​​ தன்மானம் விடவில்லை
எனக்கே என்னை காண பிடிக்கவில்லை

அன்று ஒரு நாள் ,ஒரு மாலை பொழுதில் ,
பணி முடித்து வீடு திரும்பினேன் .

என் தேவதை வீட்டு தோட்டத்தில்
வீர விளையாட்டு புரிந்து கொண்டிருந்தாள்.
ஓரிரு அடிகளை தான் வைத்திருப்பேன்,
சற்றே என்னவள் தவறி விழுந்துவிட்டால்

ஒரு பேரிடி என் மேல் விழுவதை போல்
விரைந்து சென்று அவளை தூக்கினேன்

ஒரு சிறு காயத்தை கண்டதும்,
பெரும் போரில் காயப்பட்ட மாவீரனை போல உறுமினேன்

என் கண்மணியை தனியாக விட்டுவிட்டு 'அங்கே என்ன செய்கிறீர்கள்'
என அனைவரையும்  எரிந்து விழுந்தேன்
கனலாய் கொதித்தேன்
எரிமலையாய் வெடித்தேன்
மெல்ல என் மகளை தட்டி கொடுத்து தூக்கி நிறுத்தினேன்...
என் கோவத்தால் தாயும் தாரமும் பயந்து நின்றார்கள்.....

என்னவள் ஒரு முத்தமிட்டு மீண்டும் விளையாட கிளம்பினால்...

இந்த சிறு விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என அவர்கள் என்னை நோக்க , கூனி குறிகினேன்

.
.
.

இது தான் என் பாவத்தை கழுவருத்த கணம்

என் பாவத்தின் சம்பளம் .......முத்தம்!

என் சாயம் வெளுக்கிறதே !

முன்பெல்லாம் கோவிலுக்கு செல்லும் போது "கடுவுளே ,எல்லாரையும் காப்பாத்து .ஒழுங்கா படிக்கணும் ,தம்பி பரிட்சையில பாஸ் ஆகணும்........ன்னு உறவுகளுக்காகவும் வேண்டிய காலம் மறைகிறதே .....!

நம் வீட்டிற்கு பெரியவர்கள் வரும்போது மரியாதையுடன் எழுந்து நின்று வரவேற்ற காலம் மறைகிறதே....!

முன் பின் தெரியாதவர்களை கூட அண்ணா ,அக்கா என உறவுமுறை வைத்து அழைத்த பாசமான பேச்சுக்கள் மறைகிறதே ......!

ஒத்த ஒத்த ரூபாயா சேர்த்து வைத்த காசுல நமக்கு பிடிச்ச பொருள் வாங்க கடைக்கு போகும்போது ,வழியில பட்டினி கிடக்குற பாட்டிக்கு கொஞ்சம் காசு கொடுத்த கைகள் மறைகிறதே .......!

நெடுந்தூரம் இருந்தாலும் கடிதங்கள் மூலமாகவும் ,விடுமுறை நாள் பயனங்களாலும் பலப்பட்ட உறவுகள் ,
விரல் நுனியில் அலைபேசி இருந்தும் உறவுகளை அழைக்க மறுக்கிறதே ....!

இடி மழைகளிலும்,கொளுத்தும் வெயில்களிலும் ,கும் இருட்டிலும் கண்ணை கட்டிவிட்டால் கூட கால்கள் தானாக நடக்க பழக்கபட்ட வீதிகளில் கூட இன்று நடக்க பயமாய் இருக்கிறதே ....!

To be continued.....

Tuesday, April 28, 2015

அவளே என் ......

அவளை முதன்முதலாய் கண்டதும் தான்
நான் இவ்வுலகில் பிறந்தேனோ?

அந்த முகம் தான் இனியென்
உலகம் என்பதை அறியேனோ?

அந்த காந்த கருவிழிகள்
அசைந்தாடும் கார்குழல்கல்
ஒளிர்விட்டு மின்னும் பல்வரிசைகள்
மனம் மயக்கும் மகரந்த புன்னகை
கான குயில் பேச்சு, நளின பாவங்கள் .....

செந்தமிழில் ஏனோ வார்த்தைகள்  வரண்டுவிட்டன
அவளை வர்ணிக்கும்போது !

ஏனோ அவளை கண்டதும் அழுகிறேன் ,அவளை அழைக்க விழைகிறேன்..
என்னை கட்டி அணைத்தாள் ,அழுகை நின்றது
இந்த பூமி என்னை சுற்றலானது

அன்று முதல்

அனுஅனுவாய் என்னை ரசிப்பாள்
கன்னங்களை கிள்ளி அள்ளி அமுதென ருசிப்பாள்
செல்ல சண்டைகள் இடுவாள்
மெல்ல என் காதினை திருகி ,என் குறும்புகளை ரசிப்பாள்

உண்ண அமிர்தம் படைப்பாள் உறங்க கானங்கள் இசைப்பாள்
ரசிக்க நடனங்கள் புரிவாள்
என்னை மெல்ல மெல்ல தட்டி தட்டி மெட்டுக்கள் அமைப்பாள்
பூமியாய் இந்த சூரியனை சுற்றுவாள்
நிலவாய் ஒளிர்வாள் ,
நட்சத்திரமாய் மிளிர்வாள்

உள்ளத்திலும் சுமப்பாள் ,உயிர் உள்ளவரை சுமப்பாள்
என்னை எவரையும் விட அதிகம் ரசிப்பாள்
நான் சிரிக்கையில் சிரிப்பாள்
அழுகையில் அழுவாள்
தவறுகளை கண்டிப்பாள்
சிலசமயம் கோவத்தில் தண்டிப்பாள்
பின்பு தண்டித்ததால் துடிப்பாள்
முத்தங்களால் என் காயங்கள் ஆற்றிடுவாள்!

என் மேல் நான் கொண்ட அக்கறை
அவள் மேல் எனக்குள்ள அக்கறை
அவள் மேல் அவளுக்குள்ள அக்கறை
இவையாவும் கடுகளவே ....
அவள் என் மேல் கொண்ட அக்கறை முன் !


நானே இவ்வுலகின் சக்கரவர்த்தி ,அவள் வியர்வை முத்துக்களை சேகரித்ததினால்
நானே இவ்வுலகின் அமைதி தூதுவன் அவள் புன்னகைகளை சேமித்ததனால்
நானே இவ்வுலகில் எவரையும் விட அதிர்ஷ்டசாலி அவள் அன்பை பெற்றதனால் ....


அவளே என் உலகம்
அவளே என் இதயத் துடிப்பு
அவளே என்  எல்லாம்
அவளே என்


அம்மா !
Monday, May 26, 2014

90's Kids School Life


Natraj Box


Our Lucky Pencil


Reynolds Pen

Ink Pen


Hero Pen


Canvas Shoes

Brown Cover for Notebooks

School BellAttendance/Answering in Class
BlackBoard


Slam Books

Water Paint


Camlin Geometry Box


Tik Tik Pen


Labels