Posts

Showing posts from October, 2012

மறந்து போன ....

வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும், சில மாடிகள்,பல கூரைகள் அரிசி மாவு கோலம், கயிற்றுக் கட்டில், மாட்டு சாணம், அம்மி, உரல், உலக்கை, ஏர், பானை, மத்து, ஊதாங்குழல், வேட்டி,சீலை, துண்டு, பட்டா பட்டி, தபால் நிலையம், தந்தி,நிலா சோறு,கூட்டாஞ்சோறு, வாசல், தோட்டம், ...... என்ன தான் பணம் ,வசதிகள், விஞ்ஞானம் வளர்ந்தாலும், இந்த இயந்திர வாழ்க்கை நம்மை ஊனமாக்கிவிட்டது... மாசில்லா காற்று, வெகுளி பேச்சு,வீரம், திணறவைக்கும் பாசம்,..........மறந்து ....

பறவைகளும் பாசமிகு ......

குளத்தில் தவழும் தாமரை,நீந்தி விளையாடும் சிறு மீன்கள், வயல் வரப்பினில் குடியிருக்கும் நண்டுகள், புதருக்குள் பதுங்கியிருக்கும் பாம்புகள்,கீரிகள் ஏரிகளில் ஒற்றை காலில் நிற்கும் கொக்குகள், பனை மரங்களில் குடியிருக்கும் கிளிகள், புறாக்கள்,பருந்துகள், வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சிகள்,தேனீக்கள், மின்மினி பூச்சிகள்,விட்டில் பூச்சிகள்,செவுத்து கோழிகள்,தவளைகள்,

மாலை முழுதும் விளையாட்டு

பாடம் படித்த பின்பு ,பள்ளி வாசல் தாண்டி,மாலை வீடு சென்றதும், தேநீரை சுவைத்து விட்டு, தெருவினில் தேர் போல கம்பீரமாய் வீர நடைபோட்ட ஞாபகம்....... கில்லி ,கோலி, கபடி என ஆண் காளைகள் செல்ல, பல்லாங்குழி,நொண்டி என பெண் மயில்கள் ஆட்டமிட, பார்த்து விளையாடுட என பெருசுகள் எச்சரிக்க..... .மனமும் , உடலும் புத்துணர்ச்சி பெற்ற நாட்கள் அது! ஆளில்லா மண் சாலைகள்,விட்டு விட்டு எரியும் தெரு விளக்குகள், தூரத்தில் ஊளையிடும் நாய்கள்,பயமுறுத்தும் புளிய மரங்கள்................................................திக் திக் நிமிடங்கள்!

என் கிராமத்து மரங்களும் ,நாங்களும்

ஓங்கி நிற்கும் பனை மரங்கள்,வளைந்து நிற்கும் தென்னை மரங்கள் பறவைகளின் சரணலயமாய் வீற்றிருக்கும் ஆலமரம், பிள்ளையாருக்கு நிழல் தரும் அரச மரம்,பசுமையான வயல்கள், சிறுவர்கள் குழுமி நிற்கும் நாவற்மரம் ,கோணக்காய் மரம் வாழை தோப்புகள் , கரும்பு தோட்டங்கள் ,பூந்தோட்டங்கள், மாமரங்கள், முருங்கை மரங்கள்,சாலையோர புளிய மரங்கள்,மூங்கில் மரங்கள், இன்னும் பல பல .......பசுமையான நினைவுகள்................ கிளிகள் ,குருவிகள்,மைனாக்கள் ,காகங்கள் ,...என கூடுகுடும்பமாக வாழும் ஆலமரத்தின் விழுதுகளை பிடித்து ஊஞ்சலாடிய நினைவுகள்.... மாமரங்களில் திருட்டு மாங்காய் பறித்திட ,தோட்டக்காரன் விரட்டிட, அங்கு மிங்குமாய் ஓடி தப்பித்த நினைவுகள்..... நண்பன் தோள் மீது கால் ஊன்றி மரம் ஏரிய நாட்கள்....... கரும்பு தோட்டத்தில் கண்ணாம்பூச்சி, பூந்தோட்டத்தில் பட்டாம்பூச்சி, சோலை கொள்ளை பொம்மை,தென்னை மட்டை சவாரிகள், நுங்கு வண்டிகள்,நொச்சி கொம்பு வில்கள்,காத்தாடி முள்கள், வாழை இலைகள்,முருங்கை கீரைகள்,பூசினி கொடிகள்.... வாரச் சந்தைகள்,காற்று மழைக்கு அறுவடையான வாழை கனிகள்,முருங்கை கீரைகள்,காய் கனிகள்....

பள்ளிக்கு போறோம்

அன்னையின் சமையலில் காலை உணவுண்டு, பள்ளிக்கு தயராகும் கால்கள், உடன் பிரவா நண்பர்களை போல இணைத்து செல்லும் மாடுகளும் ஆடுகளும் அவைகளை வழி அனுப்பி வைக்கும் கோழிகளும் நாய்களும் , இதனை வீட்டினுள் மறைந்திருந்து எட்டி பார்க்கும் எலிகள் ,அவற்றை வேட்டையாட காற்றிருக்கும் பூனைகள் , எதிர்வீட்டு தோழி,பக்கத்துக்கு தெரு நண்பன்......என எறும்புகள் போல பள்ளிக்கு அணிவகுத்து செல்லும் காலம் அது... கரும் பலகை ,பலப்பம்,துணிப்பையில் புத்தகம்,சாயம் போன சட்டை, தப்பு தாளமிடும் செருப்புகள் , ரெட்டை ஜடை மாணவிகள், கலர் கலர் ரிப்பன்கள் ,சில சைக்கிள்கள்,பல நட வண்டிகள்......   மரத்தடி பிள்ளையாரை வணங்கி ,ஏரிக்கரைகளை கடந்து, தேப்பங்குளத்தையும் தாமரை பூவையும் ரசித்து, வீசும் தென்றலை ருசித்து ,பள்ளி வாசலை அடைவோம்... காலை வணக்கம் சொல்லி ,கடவுள் வாழ்த்தினை பாடி,            வகுப்பறையில் அமர்வோம். கரும் பலகையை சின்னை கைகளில் துடைத்து, ‘அ’ ன ‘ஆ’ ன தொடர்வோம்...... வீட்டுபாடம் மறந்து பிரம்பு அடி வாங்கி,....... சின்ன சின்ன குறும்புகள், கிள்ளி விளையாடிய நினைவுகள், மதிய உணவு நேரம்,கொண்டு வந்த

சொர்க்கமே என்றாலும்

  மலைகளை கடந்து , மேகங்களை பிளந்து , இருளினை விரட்டிட , சூரியன் உதயமாகும் நேரம் கோழி கூவும் , சிட்டு குருவிகள் ராகம் பாடும் , பசுக்களும்  ஆடுகளும் காலை வணக்கமிட விவசாயிகள் விறு விறு என விரைந்து செல்ல வெகு தூரத்தில் காற்றினை கிழித்து செல்லும் ரயில் ஓசையில் அம்மாவின் கூக்குரலோடு மெல்ல களைந்து செல்லும் கனவு என இனிதே ஆரம்பமாகும் என் கிராமத்து காலை தினம்....! வேப்பங்குச்சியில் பல் துலக்கி , கரும்பு தோட்டமறைவிலுள்ள கிணற்றில் குளியலிட்டு, பசுமையான வயல் வரப்புகளில் துள்ளி ஓடிய பாதங்கள்.... அவ்வப்போது வந்து செல்லும் பேரூந்து , அதற்காக காற்றிருக்கும் நேரங்கள் மண் அடுப்பில் சமையல், கதவில்லா குளியலறை , வளைந்து நெளிந்து செல்லும் ஆறு, கரையோரம் வீற்றிருக்கும் பிள்ளையார் , தண்ணீரை தவழ்ந்து செல்லும் தரைப் பாலம் , ஜல் ஜல் என ஓட்டமிடும் மாட்டு வண்டி , தாமரை குளம்,வற்றாத ஏரி, மாசில்லா காற்று ,பறவைகளின் சரணாலயமாய் உள்ள ஆலமரம், பேயை போல பயமுறுத்தும் புளிய மரம், ஓங்கி நிற்குன் பனை மரம் , சற்றே வளைந்து நிற்கும் தென்னை மரம்,மஞ்சள் குங்குமணிந்த வேப்ப மரம், காவல்காரன் காவல்