என் கிராமத்து மரங்களும் ,நாங்களும்


ஓங்கி நிற்கும் பனை மரங்கள்,வளைந்து நிற்கும் தென்னை மரங்கள்
பறவைகளின் சரணலயமாய் வீற்றிருக்கும் ஆலமரம்,
பிள்ளையாருக்கு நிழல் தரும் அரச மரம்,பசுமையான வயல்கள்,
சிறுவர்கள் குழுமி நிற்கும் நாவற்மரம் ,கோணக்காய் மரம்
வாழை தோப்புகள் , கரும்பு தோட்டங்கள் ,பூந்தோட்டங்கள், மாமரங்கள்,
முருங்கை மரங்கள்,சாலையோர புளிய மரங்கள்,மூங்கில் மரங்கள்,
இன்னும் பல பல .......பசுமையான நினைவுகள்................
கிளிகள் ,குருவிகள்,மைனாக்கள் ,காகங்கள் ,...என கூடுகுடும்பமாக வாழும்
ஆலமரத்தின் விழுதுகளை பிடித்து ஊஞ்சலாடிய நினைவுகள்....
மாமரங்களில் திருட்டு மாங்காய் பறித்திட ,தோட்டக்காரன் விரட்டிட,
அங்கு மிங்குமாய் ஓடி தப்பித்த நினைவுகள்.....
நண்பன் தோள் மீது கால் ஊன்றி மரம் ஏரிய நாட்கள்.......
கரும்பு தோட்டத்தில் கண்ணாம்பூச்சி, பூந்தோட்டத்தில் பட்டாம்பூச்சி,
சோலை கொள்ளை பொம்மை,தென்னை மட்டை சவாரிகள்,
நுங்கு வண்டிகள்,நொச்சி கொம்பு வில்கள்,காத்தாடி முள்கள்,
வாழை இலைகள்,முருங்கை கீரைகள்,பூசினி கொடிகள்....
வாரச் சந்தைகள்,காற்று மழைக்கு அறுவடையான வாழை கனிகள்,முருங்கை கீரைகள்,காய் கனிகள்.......
இந்த நகர வாழ்கை இவையெல்லாம் மறக்கடித்து  விட்டதே ....

Comments

Popular posts from this blog

90's Kids School Life

90's Kids Games