Posts

Showing posts from 2015

பாவத்தின் சம்பளம் .....முத்தம் !

Image
என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன் என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன் என் உடன்பிறப்புகளின் சிறுசிறு  ஆசைகளை  கொன்று வந்துள்ளேன் தினமும்  காலையில் நான்  எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும் என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து, உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள் பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை பிடிக்கவில்லை  என உதறி தள்ளுவேன் கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள் மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன் வலிகளை பொருத்து புன்னகை புரிவாள் நான்  வண்ண வண்ண சட்டைகளை அணிய என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில் காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியும் தான் அணிந்திருந்தார் வாயை கட்டி வயிற்றை  கட்டி எனக்காக தியாகம் செய்த  அவர்கள் வாழ்கையை கூட மதிக்காமல் ஊதாரியாய் செலவிழுத்தேன் தான் படிக்கவில்லை என்பதால் என் படிப்பிற்காக எதையும் செய்தார்கள் நானோ படிக்க எதையும் செய்யவில்லை....? மழைக்கு கூட சமையலறை பக்கம் ஒதுங்கதாவன் சாப்பிட தட்டை கூட அலம்பதாவன், துணிகளை துவைக்க தெரியாதவன் ... ஏன் என் ஆடைகளின் இருப்பிடம

என் சாயம் வெளுக்கிறதே !

முன்பெல்லாம் கோவிலுக்கு செல்லும் போது "கடுவுளே ,எல்லாரையும் காப்பாத்து .ஒழுங்கா படிக்கணும் ,தம்பி பரிட்சையில பாஸ் ஆகணும்........ன்னு உறவுகளுக்காகவும் வேண்டிய காலம் மறைகிறதே .....! நம் வீட்டிற்கு பெரியவர்கள் வரும்போது மரியாதையுடன் எழுந்து நின்று வரவேற்ற காலம் மறைகிறதே....! முன் பின் தெரியாதவர்களை கூட அண்ணா ,அக்கா என உறவுமுறை வைத்து அழைத்த பாசமான பேச்சுக்கள் மறைகிறதே ......! ஒத்த ஒத்த ரூபாயா சேர்த்து வைத்த காசுல நமக்கு பிடிச்ச பொருள் வாங்க கடைக்கு போகும்போது ,வழியில பட்டினி கிடக்குற பாட்டிக்கு கொஞ்சம் காசு கொடுத்த கைகள் மறைகிறதே .......! நெடுந்தூரம் இருந்தாலும் கடிதங்கள் மூலமாகவும் ,விடுமுறை நாள் பயனங்களாலும் பலப்பட்ட உறவுகள் , விரல் நுனியில் அலைபேசி இருந்தும் உறவுகளை அழைக்க மறுக்கிறதே ....! இடி மழைகளிலும்,கொளுத்தும் வெயில்களிலும் ,கும் இருட்டிலும் கண்ணை கட்டிவிட்டால் கூட கால்கள் தானாக நடக்க பழக்கபட்ட வீதிகளில் கூட இன்று நடக்க பயமாய் இருக்கிறதே ....! To be continued.....

அவளே என் ......

அவளை முதன்முதலாய் கண்டதும் தான் நான் இவ்வுலகில் பிறந்தேனோ? அந்த முகம் தான் இனியென் உலகம் என்பதை அறியேனோ? அந்த காந்த கருவிழிகள் அசைந்தாடும் கார்குழல்கல் ஒளிர்விட்டு மின்னும் பல்வரிசைகள் மனம் மயக்கும் மகரந்த புன்னகை கான குயில் பேச்சு, நளின பாவங்கள் ..... செந்தமிழில் ஏனோ வார்த்தைகள்  வரண்டுவிட்டன அவளை வர்ணிக்கும்போது ! ஏனோ அவளை கண்டதும் அழுகிறேன் ,அவளை அழைக்க விழைகிறேன்.. என்னை கட்டி அணைத்தாள் ,அழுகை நின்றது இந்த பூமி என்னை சுற்றலானது அன்று முதல் அனுஅனுவாய் என்னை ரசிப்பாள் கன்னங்களை கிள்ளி அள்ளி அமுதென ருசிப்பாள் செல்ல சண்டைகள் இடுவாள் மெல்ல என் காதினை திருகி ,என் குறும்புகளை ரசிப்பாள் உண்ண அமிர்தம் படைப்பாள் உறங்க கானங்கள் இசைப்பாள் ரசிக்க நடனங்கள் புரிவாள் என்னை மெல்ல மெல்ல தட்டி தட்டி மெட்டுக்கள் அமைப்பாள் பூமியாய் இந்த சூரியனை சுற்றுவாள் நிலவாய் ஒளிர்வாள் , நட்சத்திரமாய் மிளிர்வாள் உள்ளத்திலும் சுமப்பாள் ,உயிர் உள்ளவரை சுமப்பாள் என்னை எவரையும் விட அதிகம் ரசிப்பாள் நான் சிரிக்கையில் சிரிப்பாள் அழுகையில் அழுவாள் தவறுகளை கண்டிப்பாள் சிலசமயம் கோவத்தி